Friday, 20 September 2013

கூகிள் கண்ணாடி - "ஓஹோ..!"



தொழில்நுட்பம்.. தொழில்நுட்பம்... எங்கும் எதிலும் தொழில்நுட்பம்.. 

கடந்த பதிவொன்றில் கூறியது போல இனி கடுகளவிற்கு சுருங்கிவிடும் போலிருக்கிறது தகவல்தொழில்நுட்பச் சாதனங்கள். கையளவு தொலைப்பேசி.... ஒரு ஸ்மார்ட் வாட்சாக மாறியுள்ளது.. 

சிறிய மூக்கு கண்ணாடி பட்டையளவே உள்ள கூகிள் கண்ணாடியில் அசத்தலான அனைத்து வசதிகளும் வந்துவிட்டது. 

இது வெறும் கண்ணாடி அல்ல.. ஒரு மினி ஸ்மார்ட்போன், ஒரு மினி கம்ப்யூட்டர்.. ஒரு மினி லேப்டாப்.. ஒரு மினி டேப்ளட்... இப்படி எதைச்சொன்னாலும் இதற்கு ஒப்பாகாது... ஏனென்றால் இவைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது கூகிள் கண்ணாடி (Google Glass).

google-glass-New-technological-evolution

மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட பரிணாமம் என்று கூட இதைச் சொல்லலாம். 

அப்படி என்னதான் இந்த கூகிள் கண்ணாடியில் உள்ளது? 


இல்லாததது எது என்று கேட்டால்தான் சரியான கேள்வியாக இருக்கும். காரணம் இதுவரைக்கும் வந்த மொபைல்களில் உள்ள அனைத்து ஸ்பெஸிலிட்டிகளும் உள்ளன. 
  • வை-பை, புளூடூத், டச் ஸ்கிரீன், இன்டர்நெட் வசதிகள்...
  • வீடியோ எடுக்கும் வசதி...
  • போட்டோ எடுக்கும் வசதி..
  • எடுக்கப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், அக்கண்ணாடியில் உள்ள Memory Card ல் சேமிக்கும் வசதி..
  • எடுக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயிலில் பகிர்ந்து (Share) கொள்ளும் வசதி... 
  • E-mail களை இக்கண்ணாடியிலேயே பார்த்துக்கொள்ளும் வசதி... 
  • மின்னஞ்சலுக்கு வாய்மொழி (Voice input) மூலம் பதிலளித்தால், அது எழுத்துகளாக மாறிவிடும். 
  • ஏதாவது சந்தேகம் ஏற்பட்டு, கண்ணாடியிடம் கேட்டால், உடனே பதில் தந்து விடும். உதாரணமாக உலக வங்கி எங்குள்ளது? உலக வங்கியின் படங்கள் ணடும் எனக் கேட்டால், இன்டர்நெட்டில் தேடி, அதற்குரிய தகவல்களை உடனே நமது கண் முன்னே நிறுத்தும்.  கண்ணாடியின் சிறிய ஸ்கிரீனில் அதுபற்றிய தகவல்களைப் படங்களை காட்டும்.  
  • எங்காவது வெளியில்  அல்லது வெளியூரில் பயணிக்கும் போது, செல்லவேண்டிய பகுதிக்கு வழி கேட்டால் அந்த வழிக்குரிய MAP ஸ்கிரீனில் காண்பிக்கும். 
  • செல்லுமிடமெல்லாம் உள்ளதை, நம் கண்ணால் பார்க்கும் பகுதிகள் அனைத்தையும்,  இங்கிருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு  நேரடியாக ஒளிப்பரப்பலாம் (Live Telecos). 
  • இந்த கண்ணாடியில் உள்ள தொழில்நுட்பம், அன்றாட பழக்க வழக்கங்களை கவனிக்கிறது. உதாரணத்துக்கு அலுவலகம் செல்லும் நேரம், செல்லும் வழி, காலநிலை போன்றவற்றை தெரிவிக்கிறது. 
  • இது ஒரு மொழி மாற்றியாகவும் (Translator) செயல்படுகிறது. மொழி தெரியாத நாடுகளில் பயணம் மேற்கொள்ளும்போது அங்கு பேசப்படும் மொழியை நமக்கு வேண்டிய மொழியில் மொழிப்பெயர்த்துக் கொடுக்க்கிறது.. 
  • இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட  இதனுடைய விலை சற்று அதிகம்தான்... ஆனால் இதிலுள்ள வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதனுடைய விலையும் குறைவுதான்.. எவ்வளவு என கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டிமேல்.. ஒன்லி 95 ஆயிரம் மட்டும்தான்..
கூகிள் கண்ணாடியை  "ஓஹோ.." என கொண்டாடுவோம். ஏனெனில் அடுத்த தலைமுறை தகவல்தொழில்நுட்பத்தின் முதல் வாரிசு இதுவாகத்தான் இருக்கும். இல்லாத்து இல்லை என்று சொல்லமளவிற்கு வசதிகளடங்கிய இக்கூகிள் கண்ணாடி.. இனி உலகையே ஆளப்போகிறது என்பதில் சந்தேகமில்லை...இனி நீங்கள் கூகிள் கண்ணாடி என்று சொன்னாலே.. சொல்வீர்கள்...

"ஓ...ஹோ....!!!!"

Google Glass Specs in English: 
Android 4.0.4(Ice Cream Sandwich)
682mb of RAM
Dual-core TI OMAP 4430 processor
New-technological-evolution-Google-glass.
Source and Image credit: google.com

Courtesy : http://www.tholilnutpam.com/2013/09/google-glass-New-technological-evolution.html

No comments:

Post a Comment